இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு உன்னதமான வாழ்வு அமைய உறவினர்களின் ஒத்துழைப்பு வழங்குவார்கள், சுப செய்திகள் வந்து சேரும், வருமானம் திருப்திகரமாக இருக்கும் தொழில் வெற்றி நடைபோடும், கடல் பயண வாய்ப்புகள் கைகூடும்.

ரிஷபம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள், நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும், உங்களுடைய வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மிதுனம்

இன்று தாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள், விரயங்கள் அதிகரிக்கும், வி.ஐ.பிக்களை விரோதித்துக் கொள்ளவேண்டாம், உத்தியோகத்தில் உடன் பிறப்புகளால் இடையூறுகள் உண்டாகும்.

கடகம்

இன்று தங்களுக்கு வருமானம் வாயில் தேடி வரும் நாள், திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடந்தேறும் தொழில் வளர்ச்சி ஏற்படும் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள், மனக்குழப்பங்கள் நீங்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள், பொருளாதார நெருக்கடி நீங்கும், சேமிப்புகள் அதிகரிக்கும், திருமண முயற்சி கைகூடும், உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு மலைபோல வந்த துன்பங்கள் பனிபோல விலகி செல்லும் நாள், சிக்கனத்தைக் கடைபிடித்து சிறப்படைவீர்கள், தொழில் முன்னேற்றம் உண்டாகும், கடன் சுமை குறைய முன்னெடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள், பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு வழிகாட்டுவார்கள், வருமானம் திருப்திகரமாக இருக்கும் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள், எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள், பிரபலங்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் நாள், பொருளாதார நெருக்கடி நீங்கும், வீண் செலவுகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க சுப காரியங்களை செய்வது நல்லது, உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்

இன்று நல்லவர்கள் உங்களை நாடி வரும் நாள். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும், காலை நேரம் கலகலப்பான செய்தி வந்து சேரும், எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.

கும்பம்

பாதியில் நின்ற காரியங்கள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெறும், சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் உண்டாகும், நண்பர்கள் நல்ல தகவலை வழங்குவார்கள்.

மீனம்

இன்று தங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள், பிரியமானவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் அதிகரிக்கும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.