மேஷம்
இன்று தங்களுக்கு விடியற்காலையிலேயே வியப்பான தகவல் வந்து சேரும் நாள், தொழில் தொடர்பாக புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், பணியாற்றுவீர்கள், பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்று தங்கள் போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறும் நாள், பொதுவாழ்வில் உண்டான வீணான பழிகள் நீங்கும், வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவி புரிவார்கள்.
மிதுனம்
இன்று தங்களுக்கு நட்பு பகையாகமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள், பரிமாற்றத்தில் கவனம் தேவை, தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க நேரலாம்.
கடகம்
இன்று தங்களுக்கு இன்னல்கள் யாவும் தீர இறைவனை வணங்க வேண்டிய நாள், பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் நன்று, உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
சிம்மம்
இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள், உறவினர்களின் சந்திப்பு காரணமாக, மகிழ்ச்சியடைவீர்கள். பயணங்களும் மூலமாக பலன் வந்து சேரும் உபயோகத்தில் பதவி உயர்வு தொடர்பான தகவல் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.
கன்னி
இன்று தங்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள், வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றி பெறும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம், குடும்ப பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல.
துலாம்
இன்று தங்களுக்கு புதிய திருப்பங்கள் உண்டாகும் நாள், பொது வாழ்வில் உண்டான வீண் தொல்லைகள் நீங்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள் தொழில் வளர்ச்சி ஏற்படும் பஞ்சாயத்துக்கள் அதிகமாகும்.
விருச்சிகம்
வருமானம் திருப்திகரமாக இருக்கும் மாற்றினத்தார்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும், வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகள் யாவும் அதிகரிக்கும் நாள், தேவைக்கேற்றவாறு யாருடைய பணமாவது உங்களுடைய கைகளில் புரண்டு கொண்டிருக்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
மகரம்
இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள், வழிபாடுகளில் நம்பிக்கை ஏற்படும் உத்தியோகத்தில் வாகனம் வீடு ஆகியவற்றை வாங்க கேட்ட உதவி உடனடியாக கிடைக்கும், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள்.
கும்பம்
சண்டை சச்சரவுகள் நீங்கி சமாதானமடையும் நாள், எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு சக பணியாளர்களுக்கு போவதற்கான வாய்ப்புண்டு.
மீனம்
இன்று தங்களுக்கு யோகமான நாள், வெளியுலகத் தொடர்புகள் தாங்கள் விரும்பும் விதத்திலிருக்கும் வெளிநாட்டு அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள் உத்யோகத்தில் உங்களுடைய செயல்பாடுகள் மற்றவர்களை பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கும்.