இந்த ராசிக்காரர்களுக்கு இன்று இது நிச்சயம் நடந்தே தீரும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள், அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். ஆலய வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும், மங்கல ஓசை வீட்டில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவுகளை நோக்கிச் செல்லும். வாரிசுகளின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும், பழைய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூல் செய்வீர்கள், உத்தியோகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும்.

கடகம்

இன்று தங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் நாள், பொது வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவாகலாம், உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வருவதற்கான வாய்ப்பு.

சிம்மம்

இன்று தங்களுடைய தேவைகளை பூர்த்தியாவதற்கு தெய்வ வழிபாடுகளை முன்னெடுப்பது நல்லது. நிதானத்தைக் கடைப்பிடித்தால் நிம்மதி கிடைக்கும் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு.

கன்னி

இன்று தங்களுக்கு தொலைபேசி மூலமாக நல்ல தகவல் வந்து சேரும் நாள், பரிமாற்றம் ஒழுங்காகும், பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும், நேற்றைய பிரச்சனை ஒன்று நல்லதொரு முடிவிற்கு வரும்.

துலாம்

இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும் மாற்றினத்தவர்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பார்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு விஐபிக்களை சந்தித்து மகிழ்ச்சியடையும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்க செய்த முயற்சி கைகூடும். பொருளாதார நிலையை அதிகரிக்கும் நண்பர்கள் மூலமாக நல்லதொரு தகவல் வரும், நாடாளும் நபர்களின் நட்பு ஏற்படும்.

தனுசு

இன்று தங்களுக்கு லாபகரமான நாள் வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும், உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

மகரம்

இன்று தங்களுடைய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள், முன்னோர்களின் சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு தொடர்பான தகவல் வரலாம், மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம்

இன்று தங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள், அண்டை வீட்டாருடன் அளவாகப் பழகுவது மிகவும் நல்லது, உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மீனம்

இன்று தங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள், செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும் வாரிசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்து கிடைக்கும்.