இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
138

மேஷம்

இன்று தங்களுக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான வாய்ப்புண்டு காலை சமயத்திலேயே இனிமையான செய்தி வந்து சேரும், ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்

இன்று தங்களுடைய பதவி வாய்ப்புகள் பரிசீலனையில் இருக்கும் நாள், கூட்டாளிகள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வார்கள், வெளிநாட்டு தொடர்பு நன்மை கொடுக்கும், தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு அன்பான நண்பர்களின் சந்திப்பு காரணமாக, ஆனந்தம் அதிகரிக்கும் நாள், இல்லத்தில் சுப காரிய பேச்சுக்கள் முடிவாகும். பஞ்சாயத்துக்கள் நல்லதொரு முடிவிற்கு வரும் தொழில் குறித்து முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள், பொருளாதார பற்றாக்குறை நீங்கும், புது வீடு கட்டி குடியேறும் எண்ணம் அதிகரிக்கும், உத்தியோகம் தொடர்பாக எடுத்த புது முயற்சிகள் வெற்றி பெறும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள், எதிர்கால நலன்கருதி சேமிப்பீர்கள் பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்கும் திட்டம் நிறைவேறும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு.

கன்னி

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், செலவுகள் அதிகரிக்கும், அடுத்தவர்களுக்கு வாக்குக்கொடுக்கும்போது சிந்தித்து செயலாற்றுவதே நல்லது. குடும்பத்தில் வீண் குழப்பங்கள் தோன்றி மறையும்.

துலாம்

இன்று தங்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும் நாள், பணவரவில் இருந்த தடைகள் நீங்கும், புதிய பொறுப்புகளும், பதவிகளும், தங்களை நாடிவரும் உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்களுடைய குணமறிந்து செயல்படுவார்கள், தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும் உத்தியோக உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு யோகமான நாள், பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள் எதிர்பார்த்த இலாகா மாறுதல் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் நாள், தொழில் முன்னேற்றத்திற்கு உதவி புரிந்த சிலரை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள், வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் நாள், புதிய தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் அதிகரிக்கும். அலுவலக பணிகள் வேகமாக நடக்கும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் குடும்ப பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.

மீனம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். முன்னோர்களின் சொத்துக்கள் உள்ளிட்டவற்றில் முறையான பங்கீடு கிடைக்கும், உத்தியோகத்தில் பணிநிரந்தரம் தொடர்பான தகவல் வரும்.

Previous articleநாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!
Next articleதாலி தோஷமுள்ள பெண்கள் வழிபட வேண்டிய திருக்கோவில்!