25-6-2022- இன்றைய ராசிபலன்கள்

0
197

மேஷம்

இன்று தங்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள், பணியாளர்களால் உண்டான பிரச்சனை நீங்கும், வாகன மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும், தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவார்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு ஆதாயம் எதிர்பார்த்தபடி இருக்கும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும், உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு கைநழுவி செல்வதற்கான வாய்ப்புண்டு.

மிதுனம்

இன்று தங்களுக்கு வழக்குகளில் திசை மாற்றம் உண்டாகும் நாள், இல்லத்தில் மங்கள செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியே கேட்க முடியும், உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

இன்று தாங்கள் வைராக்கியத்துடன் செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள், தொழில்வளர்ச்சி கருதி பயணம் ஒன்றை செய்வீர்கள், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள், பரிமாற்றம் ஒழுங்காகும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல தகவல் வந்து சேரும் நாள், நம்பிக்கைகள் யாவும் நடைபெறும், புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு வரவை விட செலவு அதிகமாக இருக்கும் நாள், அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாற்றாக வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

துலாம்

இன்று தங்களுக்கு மாலை நேரத்தில் மனக்குழப்பம் உண்டாகும், மதியத்திற்கு மேல் செலவுகள் ஏற்படும். வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விழிப்புணர்வுதேவை, கொள்கை பிடிப்பை தளர்த்திக் கொள்ள நேரலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும் நாள், விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும், எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு வரவு இரட்டிப்பாகும் நாள், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவார்கள் தொழிலில் மாற்றம் செய்யலாமா? என்று யோசனை செய்வீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள், இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும், நீங்கள் சொல்லும் யோசனைகள் அடுத்தவர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின்
ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுடைய மனதிலிருந்த சுமை அனைத்தும் குறையும் நாள், வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும், அடுத்தவர்களுக்காக வாங்கி கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும், புதிய தொழில் ஆரம்பிக்கும் திட்டங்கள் யாவும் நிறைவேறும்.

மீனம்

இன்று தங்களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள், நண்பர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள் வராமலிருந்த வரவு இன்று கைக்கு வரலாம்.

Previous articleதமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும்  100 ஏசி எலக்ட்ரிக்  பஸ்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
Next articleஉங்கள் வீட்டில் நாள்தோறும் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here