இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு இனிமையான செய்திகள் வந்து சேரும் நாள் அடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய லட்சியங்கள் யாவும் நிறைவேறும் நாள், நாடு மாற்றம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும். நீண்ட தூரப்பயணங்கள் செல்வதற்காக வகுத்தத்திட்டம் கைகூடும்.

மிதுனம்

உறவினர்களின் சந்திப்பு காரணமாக, உள்ளம் மகிழ்ச்சியடையும் நாள், பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள், வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். அக்கம்பக்கத்தினர் பகை மாறும்.

கடகம்

இன்று தாங்கள் கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள், உறவினர்களின் வருகை இருக்கும், திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும், உத்யோகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள், பலன்கள் வாயில் தேடி வரும், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள், வழிபாடுகளில் நம்பிக்கை ஏற்படும், உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பான தகவல் வரலாம்.

கன்னி

இன்று தாங்கள் நல்லவர்களை சந்தித்து நலம் காண வேண்டிய நாள், தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு வழங்குவார்கள், அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்

இன்று தாங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், கடன் சுமை குறைய புதிய வழி கிடைக்கும், உதிரியான வருமானம் வந்து சேரும், எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள், இடம் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள், எதிர்பாராத பயணங்கள் காரணமாக, செலவுகள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை, தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டாகும், இடமாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள்.

தனுசு

இன்று தாங்கள் வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள், வளர்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், அரைகுறையாக நின்ற பணிகள் மீண்டும் தொடங்கும்.

மகரம்

இன்று சுப காரியங்கள் தொடர்பான பேச்சுக்கள் முடிவாகும் நாள், வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும், வருமானம் அதிகரிக்கும், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள், தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள், பரிவர்த்தனையில் உயர்ந்த பிரச்சினை நீங்கி இயங்கும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் உதவி புரிவார்கள், உடல் நலம் சீராகும், நண்பர்களால் லாபம் கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு பொது வாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள், பணவரவு திருப்திகரமாக இருக்கும் தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம்.