இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணவு கட்டுப்பாடு அவசியம்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும், பரிமாற்றத்தில் திருப்தி ஏற்படும், தொழிலை மாற்ற நினைப்பீர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும், பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு லாபகரமான நாள், நல்லவர்களை தொடர்பால் லாபம் காண்பீர்கள், கடல் பயணம் வாய்ப்புகள் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றலாம், விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள், திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு பதவியிலிருப்பவர்களால் உதவி கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள், பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள்.

சிம்மம்

இன்று தங்களுடைய வாய்ப்புகள் வாயிற் கதவை தட்டும் நாள், நாட்டை ஆளும் நபர்களின் நட்பு கிடைக்கும், தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம், நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு மனக்கலக்கம் உண்டாகும் நாள், உணர்ச்சிவசப்பட்டு போடுவதால் உறவுகள் பகையாகும் வாய்ப்புண்டு அலைச்சலுக்கேற்ற ஆதாயமிருக்காது, மற்றவருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

துலாம்

இன்று தங்களுக்கு நல் வாய்ப்புகள் தேடி வரும் நாள், உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பரிமாற்றத்தில் திருப்தி ஏற்படும், விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள், தொழிலில் வருமானப் பற்றாக்குறை உண்டாகும். வாகன வழியில் திடீர் செலவுகள் ஏற்படும், எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையலாம்.

தனுசு

இன்று தங்களுக்கு அருகில் இருப்பவர்களால் ஆதரவு கிடைக்கும் நாள், வருமானம் திருப்திகரமாக இருக்கும், பழுதடைந்த பழைய வாகனத்தை மாற்றம் செய்ய நினைப்பீர்கள், சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

மகரம்

இன்று தங்களுக்கு உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள், மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும், தைரியமும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று தாங்கள் எதிர்பார்த்த லாபம் வீடு தேடி வரும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள், பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம், திருமண பேச்சுக்கள் நல்லதொரு முடிவிற்கு வரும்.

மீனம்

இன்று தங்களுக்கு பயணத்தால் பலன் கிடைக்கும் நாள், தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் மூலமாக ஒத்துழைப்பு கிடைக்கும், ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடுகள் முக்கியம்.