இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப சுமை அதிகரிக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும் நாள், வரவு திருப்திகரமாக இருக்கும் உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைவீர்கள், புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். வாரிசுகளால் உதிரி வருமானங்கள் வரும், வரன்கள் வாயில் தேடி வருவதற்கான வாய்ப்புண்டு.

ரிஷபம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும், உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.

மிதுனம்

இன்று தங்களுக்கு வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும் நாள், அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் கிடைக்கும், குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு தொலைபேசி வழி தகவல் அனுப்பலாம் தரும் விதமாக இருக்கும் நாள், குடும்பத்தில் உண்டான கருத்து வேறுபாடுகள் நீங்கும், உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

சிம்மம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள், அறிவு நுட்பத்தால் மகத்தான காரியங்களை செய்து மகிழ்ச்சியடைவீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம், குடும்பத்தினருடன் உண்டான மனக்கசப்பு நீங்கும் பயணத்தால் பலன் உண்டு.

கன்னி

இன்று தங்களுக்கு பஞ்சாயத்துக்கள் யாவும் நல்லதொரு முடிவுக்கு வரும் நாள் பற்றாக்குறை நீங்கும். வாரிசுகளின் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகலாம், உத்தியோக முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

இன்று தங்களுடைய வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள், எதிர்கால நலன் கருதி புதிய திட்டம் ஒன்றை வகுப்பீர்கள். சொத்துக்களில் உண்டான வில்லங்கங்கள் நீங்கும், மாலை நேரம் மனதிற்கினிய செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் தொட்ட காரியம் யாவும் தொலங்கும் நாள் தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும் வருமானம் பிருத்திகரமாக இருக்கும், தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்.

தனுசு

இன்று தங்கள் உடன்பிறப்புகள் பகை மறந்து செயல்படும் நாள், மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பார்கள், கூட்டுத் தொழில் தனித்தொழிலாக எடுத்த முயற்சி கைகூடும்.

மகரம்

இன்று தங்களுக்கு திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடக்கும் நாள், பேச்சுத் திறமை காரணமாக, பிரபலஸ்த்தரர்களிடம் காரியம் ஒன்றை சாதித்துக் கொள்வீர்கள், விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.

கும்பம்

இன்று தங்களுக்கு புகழ் அதிகரிக்கும் நாள், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், புண்ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள், குடும்பச்சுமை அதிகரிக்கும், மன அமைதிக்காக அடுத்தவர்களிடம் தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிப்பீர்கள்.

மீனம்

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், எதிரிகளின் பலம் அதிகரிக்கும், பயணங்களை தள்ளி வைப்பீர்கள், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாது, தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.