13-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும், இடம், பூமி, வாங்க எடுத்த முயற்சி அனுகூலம் தரும், பகையொன்று நட்பாக மாறலாம்.

ரிஷபம்

இன்று செலவுகள் அதிகரிக்கும் நாள், எந்த ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டாலும் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசிப்பது நல்லது, எதிர்பார்த்ததை போல எதுவும் நடக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு வியக்கும் விதமான தகவல் கிடைக்கும் நாள் அதிக நேரத்தில் மனதுக்கு இனிய சம்பவம் ஒன்று நடக்கலாம். குடும்ப செலவுகளில் தாராளம், காட்டுவீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும், ஆதாயம் கொடுக்கும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும் கவுரவம், அந்தஸ்து, உள்ளிட்டவை உயரும், உத்தியோகப் பிரச்சனை நீங்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள், பண தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும், குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள் உத்தியோகத்தில் இலாக்கா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே இருக்கும், குடும்பத்தினர்களிடம் கோபமாக பேசிவிட்டு அதன் பிறகு வருத்தமடைய நேரலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு பண வருவது தாராளமாக இருக்கும் நாள், ஆனாலும் செலவுகள் அதிகரிக்கும் தொலைபேசி வழி தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும், எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

இன்று அதிகாலையிலேயே ஆதாயம் கொடுக்கும் தகவல் வந்து சேரும் அறிகுறியாக நின்ற பணி மறுபடியும் ஆரம்பமாகும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் சேமிப்புகளை உயர்த்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு வரவும், செலவும், சமமாக இருக்கும் நாள், மறதியால் விட்டுப் போன பணிகளை ஆரம்பிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும், கொடுத்த பாக்கிகள் வசூலாகும், உடன் பிறந்தவர்களால் நன்மை ஏற்படும்.

மகரம்

இன்று தங்களுக்கு பற்றாக்குறை நீங்கி பணவரவு அதிகரிக்கும் நாள், குடும்பத்தில் இருப்பவர்களால் உண்டான பகை நீங்கும், சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், உத்தியோகத்தில் பணி நிரந்தரம் தொடர்பான தகவல் வரலாம்.

கும்பம்

இன்று தாங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும்நாள், தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை தரும் விதமாக இருக்கும், ஆற்றல் மிக்கவர்கள் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு வருமானப் பற்றாக்குறை நீங்கும் நாள், பக்கபலமாக இருப்பவர்கள் சிக்கல் தீர வழிகாட்டுவார்கள். உடல் நலனில் கவனம் தேவை, அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.