நீங்க இந்த ராசியா? இன்னைக்கு ஒரே பண மழை தான் போங்க!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தாங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நன்று. பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு யோகமான நாள். நினைத்த காரியம் நிறைவேறும், நல்லவர்களின் தொடர்பு காரணமாக நலம் காண்பீர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமிருக்கிறது. ஆதாயம் தரும் காரியம் ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்

நண்பர்களால் நன்மை கிடைக்கும் நாள், திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும், தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு பார்ட்னரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக முயற்சி பலிதமாகும்.

கடகம்

தெய்வ வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் உண்டாகலாம். எடுத்த காரியங்களை நிறைவேற்ற பிரயாசை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும் செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்

வாராக்கடன் என்று நினைத்த பணம் கைக்கு வரும் வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள். உதாசீனப்படுத்திவிட்டு சென்றவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவார்கள். பழைய பிரச்சனைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

கன்னி

உங்களைக் கண்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை மூலமாக இருந்த பிரச்சனை நல்ல தீர்வுக்கு வரும். தகுதியானவர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள்.

துலாம்

இன்று தங்களின் எதிரிகள் பலமற்றுப்போகும் நாள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும் நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காணும் நாள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு நன்மை நடைபெறும் நாள் நாடாளும் நபர்களின் நட்பு கிடைக்கும் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு

இனிமையான செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் விருத்தி ஏற்படும் பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் ஏற்படும். பெற்றோரின் வழியில் பிரியம் அதிகரிக்கும்.

மகரம்

தடைகள் யாவும் தகர்ந்து போகும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். தக்க நேரத்தில் உறவினர்கள் உதவி கிடைக்கும் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வீர்கள்.

கும்பம்

நீங்கள் எதிர்பார்த்த லாபம் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றிய மகிழ்ச்சி அடைவீர்கள் பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும் விவாகப் பேச்சுக்கள் நல்லதொரு முடிவுக்கு வரும்.

மீனம்

திடீரென மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள்.