14-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
66

மேஷம்

இன்று தங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள். வெகு நாளாக இருந்து வந்த எதிர்பார்ப்பான தகவல்  இன்று வந்து சேரலாம். அரசு வழி காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

இன்று தங்களின் உள்ளத்திலும், இல்லத்திலும், அமைதி அதிகரிக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியடையும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும், தனிப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம்.

கடகம்

இன்று தங்களுடைய வருமான உயர்வுக்கு வழி பிறக்கும் நாள், வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரைகுறையாக நின்ற பணிகளை தொடருவீர்கள். உறவினர்களுடன் உண்டான கருத்து வேறுபாடு நீங்கும்.

சிம்மம்

தொலைபேசி மூலமாக இன்று தங்களுக்கு ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள், நினைத்தது நிறைவேறும் உத்யோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும் வாகன பராமரிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு துணிச்சலும், நம்பிக்கையும், அதிகரிக்கும் நாள், கூட்டு தொழிலை தனித்து தொழிலாக மாற்றலாமா? என்ற சிந்தனை அதிகரிக்கும். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும் அரசியல் ஈடுபாடு உண்டாகும்.

துலாம்

இன்று நாங்கள் இடமாற்றம் மாற்றம் தொடர்பாக சிந்திக்கும் நாள், உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும், வருமா? வராதா? என நினைத்த பணவரவு ஒன்று இன்று கைக்கு கிடைக்கலாம்.

விருச்சிகம்

இன்று தாங்கள் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். கண்ணியம் மிக்கவர்கள் கை கொடுத்து உதவி புரிவார்கள். தொழிலில் புதிய பணியாளர்களை இணைக்கும் எண்ணம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று நாங்கள் கேட்ட உதவி எளிதில் கிடைக்கும் நாள். அறிவு நுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள், வீடு, நிலம், தொடர்பாக எடுக்கும் முடிவுகளை தள்ளி வைப்பது நன்று.

மகரம்

இன்று தாங்கள் திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் உண்டாகும் நாள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் பங்குதாரர்களால் பிரச்சனை உண்டாகும், மறதி அதிகரிக்கும், தன்னம்பிக்கையை தளர விட வேண்டாம்.

கும்பம்

இன்று தங்களுடைய ஆற்றல் பளிச்சிடும் நாள், தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நீண்ட நாளைய விருப்பங்கள் நிறைவேறும், நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களை தேடி வந்து உதவி செய்வார்கள்.

மீனம்

இன்று தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடையும் நாள், இல்லத்தரசிகளின் ஒத்துழைப்போடு இனிய பணிகளை செய்து முடிப்பீர்கள், உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.