20-7-2022- இன்றைய ராசி பலன்கள்

0
69

மேஷம்

இன்று தங்களுக்கு அருகிலிருப்பவர்களால் அனுபவம் உண்டாகும் நாள், செலவுக்கேற்ற வரவு இருக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும், கட்டிடம் கட்டும் பணியை மறுபடியும் தொடர வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள், கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவார்கள், இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் நினைத்ததை முடித்து வைத்து நிம்மதி காணும் நாள், நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும். வாரிசுகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள், மனதில் புதிய சிந்தனைகள் தோன்றலாம். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து இணையலாம், ஆதாயம் கொடுக்கும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு எதிர்பாராத செலவுகள் காரணமாக, இன்னல்கள் உண்டாகும் நாள், எதிரிகளின் பலம் அதிகரிக்கும், மறதியால் அவதியுறுவீர்கள், உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலமாக உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.

கன்னி

இன்று தங்களுடைய எதிரிகள் உதிரிகளாகும் நாள், எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை நீங்கும், உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், பழைய கடன் பாக்கிகளை நாசுக்காக பேசி வசூலிப்பீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள், வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். வாரிசுகளின் சுப காரிய பேச்சு முடிவிற்கு வரலாம், வாகனம் வாங்குவது தொடர்பாக சிந்திப்பீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பொது வாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், பொருளாதார நிலை உயரும், தொழில் முன்னேற்றம் ஏற்படும், புதிய பணியாளர்களை இணைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள், தொலைபேசி வழி தகவல் உற்சாகத்தை கொடுக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பார்கள். இடம் வாங்குவது தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும் நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்ல விதமாக முடிவடையும்.

மகரம்

இன்று தங்களுக்கு இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும் நாள், ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை, திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீரென்று மாற்றம் செய்வீர்கள், குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கு திட்டம் வகுப்பீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு செலவுகள் குறைய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள், விலையுயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை, உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம்.

மீனம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள், குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், மாற்றுக் கருத்துடையவர்கள் மனம் மாறுவார்கள், வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரலாம்.