CHIDAMBARAM:சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கொடிமரத்தை பராமரிக்க விடாமல் போராட்டம் செய்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. அக்கோவிலின் சந்நிதானத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் தீட்சிதர்கள் குழு. இந்த கோவில் தமிழக இந்து சமய அறநிலைய துறையின் கீழ் வருகிறது.
கோவிந்தராஜ் பெருமாள் சன்னதி முன் உள்ள கொடி மரமானது மிகவும் சேதமடைந்து இருக்கிறது. அக் கொடிமரத்தை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதற்கான பணிகளை மேற்கொள்ள கோவில் நிர்வாகம் கொடி மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற சென்றுள்ளார்கள். அப்போது கோடி மரத்தை சுற்றி நின்று மறித்து உள்ளார்கள் தீட்சிதர்கள்.
மேலும் பிரம்மோற்சவ விழா தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி நடைபெற வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள். இத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு இந்து சமய நிலைய துறை ஆணையர் பரணிதரன் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் சந்திரன் வந்துள்ளார்கள்.
மேலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் அக்கோவிலில் குவிக்கப்பட்டுள்ளனர். தில்லை நடராஜர் கோவிலின் முதன்மை கதவு மூடப்பட்டது. இச் சம்பவம் அப் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவிலின் முதன்மை கதவு மூடப்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.