ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி பலாத்காரம்! தப்பியோடிய ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது!

Photo of author

By Sakthi

ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி கோவாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தன்னுடைய பெற்றோருடன் தங்கியிருந்தார். அங்கே ரூம் பாயாக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் தான் வெளியே சென்றிருந்த போது நீச்சல் குளத்தில் வைத்து, அதன் பிறகு அறைக்குச் சென்று தன்னுடைய மகளை கற்பழித்து விட்டதாக சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை செய்த விசாரணையில் கர்நாடகாவை சேர்ந்த ரவிலாமணி என்ற 28 வயது இளைஞர் குற்றவாளி என்று தெரியவந்தது.

இவர் சொந்த ஊரான கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றுவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து மறுநாளே கர்நாடக காவல் துறையினரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார்.