இரவு நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்து! 57 பேர் படுகாயம்!

0
148

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு அரசுக்குச் சொந்தமான கே எஸ் ஆர் டி சி பேருந்து மீது சுற்றுலா பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் குறைந்தது 57 பேர் படுகாயமடைந்தனர் என்று சொல்லப்படுகிறது.

கொல்லம் பகுதியிலிருக்கின்ற சித்தாரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா மடத்தாராசாலையில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினரின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

லேசான காயமடைந்த 15 பேர் கடற்கரையிலிருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தார்.

காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு நடுவே காயமடைந்தவர்களில் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு உதவுவதற்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருக்கிறது என்றும், கூறப்படுகிறது.

Previous articleஎன்ன இவர் தேர்வு செய்த அணியில் இவர்களுக்கு இடமில்லையா? கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சி!
Next articleஅதிர்ச்சி இந்த 10 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! தயவுசெய்து இங்க மட்டும் போகவே போகாதீங்க!