விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!

Photo of author

By Hasini

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!

Hasini

Athletes will take part! But the government will not participate! Canada announces boycott

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அங்கு எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறும். இந்த முறை இந்தமாதிரியான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே இந்த முறை அதை நிறைவேற்றலாம் என்று ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக முதலில் அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் இந்த பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது அதே காரணமாக சொல்லி தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடாவும் அறிவித்துள்ளது. சீனாவின் பீஜிங் குளிர்கால கூட்டத்தொடரில் கனடாவின் வீரர் வீராங்கனைகள் பங்கேற்பார்கள். ஆனால் கனடா அரசு சார்பில் ஒலிம்பிக் தொடரில் எந்த அதிகாரிகளும் பங்கேற்க மாட்டார்கள் என கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.