அந்த விஷயத்தில் என்னை அட்லி ஏமாற்றி விட்டார்!!! நடிகை பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்!!!

0
47
#image_title

அந்த விஷயத்தில் என்னை அட்லி ஏமாற்றி விட்டார்!!! நடிகை பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்!!!

ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரியாமணி அவர்கள் இயக்குநர் அட்லி ஒரு விஷயத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் உலகம் முழுவதிலும் வெளியானது. ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். ஜவான் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, சஞ்சய் தத், யோகி பாபு, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ஜவான் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

உருவாகி வெளியான ஜவான் திரைப்படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் உலக அளவில் ஜவான் திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகின்றது. தற்பொழுது வரை ஜவான் திரைப்படம் 730 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில் ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரியாமணி அவர்கள் தன்னை இயக்குநர் அட்லி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து நடிகை பிரியாமணி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் “ஜவான் திரைப்படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் அட்லி அவர்கள் தன்னை அணுகினார். அப்பொழுது படத்தின் கதையை என்னிடம் கூறினார். மேலும் நடிகர் விஜய் ஜவான் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கப் போகிறார் என்று என்னிடம் கூறினார். அதன் பின்னர் நடிகர் விஜய் வரும் காட்சியில் நானும் நடிப்பது போல செய்து விடுங்கள் என்று இயக்குநர் அட்லி அவர்களிடம் கூறினேன். அதற்கு அவரும் சரி என்று கூறினார்.

ஆனால் ஜவான் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு தான் நடிகர் விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த விஷயத்தில் இயக்குநர் அட்லி என்னை ஏமாற்றிவிட்டார் என்பது கூட பெரிதாக தெரியவில்லை. ஆனால் நடிகர் விஜய் அவர்களுடன் சேர்ந்து நடிக்காமல் பொது தான் மிகப் பெரிய வருத்தமாக இருக்கின்றது” என்று கூறினார்.

நடிகை பிரியாமணி அவர்கள் அட்லி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறிய வார்த்தையை வேடிக்கையாகத் தான் கூறியுள்ளார். ஜவான் திரைப்படத்தில் நடிகை பிரியாமணி அவர்கள் ஷாரூக்கான் அவர்களின் அதிரடிப்படையின் தலைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.