டீ குடிக்கும் அனைவருடைய கவனத்திற்கு! டீ போடும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! 

0
354
Attention all tea drinkers! Don't make this mistake when making tea!
Attention all tea drinkers! Don't make this mistake when making tea!
டீ குடிக்கும் அனைவருடைய கவனத்திற்கு! டீ போடும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
குடிப்பதற்கு டீ போடும் பொழுது அனைவரும் ஒரு தவறை செய்கிறார்கள். அது என்ன தவறு ஏன் அந்த தவறை செய்யக் கூடாது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் காலை உணவு சாப்பிடவில்லை என்றாலும் டீ குடித்தால் மட்டும் போதும். அந்த அளவுக்கு டீ நம்முடைய வாழ்க்கையில் முக்கிய உணவாக மாறிக் கொண்டு வருகின்றது. இந்த டீ பலமுறைகளில் தயாரிக்கப்படுகின்றது. மேலும் பல வகைகளில் இந்த டீ நமக்கு கிடைக்கின்றது.
பிளாக் டீ, பால் டீ, சுக்கு டீ என்று பல வகைகளில் கிடைக்கின்றது. இந்த டீயை குடிப்பதால் பல நன்மைகளும் கிடைக்கின்றது. நன்மைகள் எந்த அளவுக்கு கிடைக்கின்றதோ அதே அளவுக்கு தீமையும் கிடைக்கின்றது.
இந்த டீ குடிக்காமல் பலரால் ஒரு நாளை தொடங்க முடியாது. அவ்வாறு இந்த டீயை தயாரிக்கும் பொழுது நாம் செய்யும் ஒரே ஒரு முக்கிய தவறு நம்முடைய வாழ்க்கையில் பல தீமைகளை சந்திக்க வைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
நாம் டீயை தயாரிக்கும் பொழுது செய்யும் அந்த ஒரே ஒரு தவறு என்னவென்றால் டீயை அதிக நேரம் கொதிக்க வைப்பது தான். இதனால் டீயில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றது. மேலும் நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றது. டீயை அதிக நேரம் கொதிக்க விடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
டீயை அதிக நேரம் கொதிக்க விடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்…
* டீயை அதிக நேரம் கொதிக்க விடுவதால் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முழுமையாக அழிந்து விடும். நம்மில் பெரும்பாலும் பாலில் தயார் செய்யப்படும் டீ குடிக்கின்றோம். அவ்வாறு டீ போடுவதற்கு பயன்படுத்தப்படும் பாலில் கால்சியம், விட்டமின் டி, புரோட்டீன் போன்ற சத்துக்கள் இருக்கின்றது. டீ போடும் பொழுது அதிக நேரம் பாலை கொதிக்க விட்டால் பாலில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்காமலேயே சென்று விடும்.
* டீயை அதிக நேரம் கொதிக்க விட்டால் அதில் உள்ள சுவை மாறிவிடும். அதாவது பாலில் நாம் சேர்க்கும் டீத்தூளின் கசப்புச் சுவை பாலில் இறங்கி டீ கசப்பு சுவையாக மாறும். இதனால் நமக்கு கசப்பு சுவை கொண்ட டீ தான் கிடைக்கும்.
* பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கும் பொழுது அதில் உள்ள புரோட்டீன்கள் அனைத்தும் உறைந்துவிடும். இதையடுத்து அதிகமாக டீ கொதிக்க வைக்கப்படும் பொழுது டீ சற்று திரிந்த நிலைக்கு மாறிவிடும். டீயும் நமக்கு கிடைக்காது.
* நாம் டீயை அதிக நேரம் கொதிக்க வைத்து குடிப்பதால் நமக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. டீயை அதிக நேரம் கொதிக்க வைத்துவிட்டு நாம் குடிப்பதால் நமக்கு வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிறு அசௌகரியமாக இருத்தல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* டீயை அதிக நேரம் கொதிக்க வைக்கும் பொழுது பாலில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் அழிந்து விடுகின்றது. இதன் காரணமாக நம்முடைய உடலுக்கு கிடைக்க வேண்டிய பல நன்மைகளும் கிடைக்காமலேயே போய் விடுகின்றது.