செல்போன் நிறுவனங்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

செல்போன் நிறுவனங்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் ரேடியோ இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்பொழுது வரும் ஸ்மார்ட் போன்களில் அனைத்து வகையான வசதிகளும் வந்து கொண்டிருக்கின்றது. காலம் செல்ல செல்ல தொழில்நுட்பம் வளர வளர போன்களின் உருவமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறி வருகின்றது.

சில நேரங்களில் அதாவது போர், மழை போன்ற காலங்களில் இணையதளம் முடக்கப்படும். மேலும் தொலைபேசி, அலைபேசி சேவைகளும் துண்டிக்கப்படும்.

அந்த நேரத்தில் மக்களுக்கு தகவல்களை கொண்டு செல்ல முடியாமல் போகின்றது. எனவே பேரிடர் காலங்களில் மக்களுக்கு தகவல்களை கொண்டு செல்லும் வகையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் ரேடியோ இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று MAIT, ICEA போன்ற உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் ரேடியோ வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பேரிடர் காலங்களில் ரேடியோ வழியாக மக்களுக்கு தகவல்களையும், செய்திகளையும் கொண்டு செல்ல முடியும். எனவே அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களில் ரேடியோ இருப்பதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்” என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.