திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் திருமலையில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் செல்லும் நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளரச்சிக் கழகம் பல சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் திருப்பதி சுற்றுலா திட்டமும் ஒன்றாகும். இந்த திருப்பதி சுற்றுலா திட்டமானது ஒருநாள் சுற்றுப் பயணம் ஆகும். அதன் படி தற்பொழுது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு திட்டமான திருப்பதி சுற்றுலா தொகுப்பின் மூலமாக 400 பேர் சுற்றுலா செல்லலாம் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு தற்பொழுது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தற்பொழுது பல வகையான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் மக்கள் அனைவரும் அதிகமாக திருப்பதி சுற்றுப்பயண திட்டத்தை பயன்படுத்துகிறார்கள். அதுவும் ஒருநாள் சுற்றுப்பயண திட்டத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
சென்னை வாலாஜா சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் இருந்து தினமும் காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகள் திருப்பதிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
அவ்வாறு திருப்பதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். இந்த சுற்றுலா வழிகாட்டி பயணிகள் அனைவருக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இரு மொழிகளில் சுற்றுலாக்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா செல்லும் பயணிகள் அனைவருக்கும் திருத்தணியில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு உணவகத்தில் காலை உணவு வழங்கப்படும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கியுள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகள் அனைவரும் விரைவாக தரிசனத்திற்கு அனுப்பப்படுவார்கள். பின்னர் தரிசனம் முடிந்த பின்னர் பயணிகள் அனைவருக்கும் தலா ஒரு லட்டு வழங்கப்படும்.
அதன் பின்னர் மதிய உணவு வழங்கப்படும். மதிய உணவு வழங்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருச்சானூரில் உள்ள பத்மாவதி அம்மன் கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அம்மன் தரிசனம் முடித்துவிட்டு இரவு உணவு வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்வார்கள். இத்துடன் ஒருநாள் திருப்பதி பயணம் முடிந்தது.
இந்த ஒருநாள் திருப்பதி சுற்றுப் பயணத்திற்கு முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் அனைவரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ttdonline.com என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்யலாம். அல்லது சென்னையில் வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவழகத்திற்கு சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் திருப்பதி சுற்றுலா பயணம் குறித்த விவரம் அறிய 180042531111, 04425333333,  04425333444 என்ற எண்களுக்கு அழைத்தும் தெரிந்து கொள்ளலாம்” என்று தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.