பக்தர்கள் கவனத்திற்கு!! திருப்பதி சுவாமி தரிசனத்தில் புதிய மாற்றம்!! 

0
311
Attention Devotees!! New change in Tirupati Swamy darshan!!
Attention Devotees!! New change in Tirupati Swamy darshan!!

பக்தர்கள் கவனத்திற்கு!! திருப்பதி சுவாமி தரிசனத்தில் புதிய மாற்றம்!!

பல பிரபலமான கோவில்களில் திருப்பதி ஒரு முக்கியமான கோவிலாகும். நாள் ஒன்றிற்கு பெருபாலான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்கின்றன.

கடந்த மே மாதம் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதுவரை கடந்த 4 வருடங்களில் இல்லதா அளவிற்கு ஜூன் 12 ம் தேதி 92,238 பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்தனர். இந்த நெரிசலை தடுக்க தேவஸ்தானம் புதிய முறையை அறிமுகப்படுத்தியது.

இதன்படி ஒரு மணி நேரத்திற்கு 5,500  பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்முலம் தினசரி 80,000    க்கும்  மேலானோர் தரிசனம்  செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த வகையில் அதிக அளவில் தரிசனம் செய்ய முதன் முறையாக ஜூன் 12 ம் தேதி பக்தர்களை ஒரே வரிசையில் கருவறைக்கு செல்ல கொடிக் கம்பத்திற்கு அருகில் இருக்கும் வெண்டி வாக்கிலி என்னும் வெள்ளி கதவின் வழியாக அனுப்ப முயற்சி செய்யப்பட்டது.

கூட்ட நெரிசலை தவிர்க்க தேவஸ்தானம் எடுத்த முயற்சி வெற்றிபெற்றுள்ளது.அதன் காரணமாக 1 மணி நேரத்தில் 6250 பக்தர்கள் தினசரி சுவாமி தரிசனதிற்கு கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர்.

இதன்முலம் அன்றைய தேதியில் இருந்த 92,238 பக்தர்களும்  சுவாமி தரிசனம் செய்தனர். இது கடந்த 4 வருடங்களில் இல்லாத சாதனை ஆகும்.

Previous articleபலத்த காற்றுடன் மழை தொடங்கியது! மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து நிறுத்தம்!!
Next articleமீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!!