அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!!! தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
137
#image_title

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!!! தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 42 சதவீதம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து 46 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous articleபுதிய கூட்டணிக்கு அடித்தளம்.. பாஜக அண்ணாமலை மற்றும் திருமா திடீர் சந்திப்பு!!
Next articleலைக்காவிடம் ஜேசன் சஞ்சையை சேர்த்து விட்டது இவர்தான்!!! பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி!!!