பெற்றோர்கள் கவனத்திற்கு:! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அரசுஉயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,பள்ளிகள் திறப்பு குறித்தும்,நீட் தேர்வு குறித்தும்,அரியர் ரத்து விவகாரம் குறித்தும் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசினார்.
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் கூறியதாவது:
மத்திய அரசு, செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து,ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சில வழிகாட்டல் நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.மேலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பானது கட்டாயம் இல்லை என்றும் அந்தந்த மாநிலங்களின் நோய் பரவலுக்கு ஏற்ப மாநில அரசுகள்,பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து அவர்களது பெற்றோர்களின் மன நிலை என்ன என்பதனை அறிந்த பிறகே,மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி,
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வை குறித்து பேசிய முதல்வர்,நீட் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடும் கூட, ஆனால் இந்த விவகாரமானது உச்ச நீதிமன்றம் வரை சென்ற பிறகு மாநில அரசால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும் தெரிவித்தார்.மேலும்
இதைத்தொடர்ந்து அரியர் தேர்வை குறித்தும் பேசிய முதல்வர்,அரியர் ரத்து விவகாரத்தில்,அரசின் நிலைப்பாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்,
ஆனாலும் கூட இவ்வாறு கூறிய பிறகும் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.