பெற்றோர்களின் கவனத்திற்கு:! “பள்ளிகளில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை”!

0
131

கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கபடுவதாகவும், புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம்,அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்கும்வரை,தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகுறித்து கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியவாறு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதியான இன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு,ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும்,ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்வதற்கான சேர்க்கையும் இன்று முதல் தொடங்குமென்று பள்ளி கல்வித்துறை சார்பில் கூறப்படுகின்றது.
மாணவர்கள் சேர்க்கையின் போது மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டு விடும் என்றும் பள்ளிக்கல்வித்துறையால் கூறப்பட்டுள்ளது.

Previous articleசச்சின் பைலட்டின் புது வியூகம்! ராஜஸ்தான் காங்கிரசில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவருகிறார்
Next articleஅருண் விஜயின் அடுத்த பட சீக்ரெட் ரிலீஸ்!!