பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி!

0
121

பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி!

கொரோனா போது முடக்கம் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில்,மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமும் அரசு பள்ளிகள் தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சில தனியார் பள்ளிகள்,பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் 100 சதவீத கட்டணத்தை செலுத்தியாக வேண்டுமென்று பெற்றோர்களை நிர்ப்பந்தித்தது.
பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு கெரோனா காலத்தில் 100% பள்ளி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அதிகபட்சமாக 40 சதவீதம் மட்டுமே பள்ளி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும்,மேலும் 40 சதவீதம் பள்ளி கட்டணத்தை வசூலிக்கும் காலக்கெடுவை செப்டம்பர் இறுதி வரை கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த விதிகளை மீறும் பள்ளிகள் மீது புகார் அளிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 111 பள்ளிகள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக கூறி புகார் எழுந்த நிலையில் அதில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. மீதமிருந்த 9 பள்ளிகள் மீதான புகார்களை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இந்த ஒன்பது பள்ளிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய உயர் நீதிமன்றம்,பள்ளி கட்டணத்தில் முதல் தவணையாக 40 சதவீதம் கட்டணம் செலுத்துவதற்கான  காலக்கெடு இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்த காலக்கெடுவை இனியும் நீடிக்க போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கட்டணங்களை கேட்டு வற்புறுத்தினால் உடனடியாக [email protected] என்ற இமெயில் முகவரிக்கு புகார் அளிக்கலாம்.மேலும் புகார் பெறப்பட்டதன் அடிப்படையில் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Previous articleதினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!
Next articleகேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!