அரசு ஓய்வூதியம் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் ஓய்வூதிய தகுதிக்கு சேவை காலங்களில் அரசு ஊழியர்கள் எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பது பற்றியும் மேலும் அவற்றிக்கான வழிகாட்டுதல்கள் குறித்து செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதிய திட்டம் என்பது நிதி நிர்வாகத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.
ஐந்து நீண்ட கால அடிப்படையில் நிர்ணயிக்கப்டுகிறது. இந்த திட்டம் நிதி ஆதாரங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் ஒருவரின் பிற்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். மேலும் அலுவலக குறிப்பாணை CCS விதிகள் 2021 இன் கீழ் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நலனுக்காக பல்வேறு வகையான சேவைகளை எப்படி கண்டறிவது பற்றியது ஆகும்.
இதில் மாநில அரசு பணிகளில் சேவை காலம் 13இன் கீழ் தகுதி சேவையாக கணக்கிடப்படும். அதே தன்னாட்சி அமைப்பில் மாறுபடும். தன்னாச்சி அமைப்பில் பணிபுரிந்த பணியாளர்கள் விதி 14-ன் படி ஓய்வூதியம் மற்றும் கருணை தொகையை கணக்கிடலாம். மேலும் விதி 18 இன் படி பணிக்கொடைக்கான தகுதி சேவையாக ஒப்பந்ததில் பணிபுரிந்தவர்களுக்கு கணக்கிடலாம்.
மேலும் அரசு ஊழியர் மீண்டும் பணி அமர்த்தினால் முந்தைய பணிக் காலத்தை விதி 19ன் கீழ் கணக்கிடலாம். அது மட்டும் அல்லாமல் பயிற்சிக்காக செலவிடப்படுவது விதி 22ன் படி ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகை கணக்கிடலாம். இதன் மூலம் எவ்வாறு கணக்கிட முடியும் என அறியலாம்.