பொதுமக்கள் கவனத்திற்கு! இந்தத் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு தடை!

0
201

பொதுமக்கள் கவனத்திற்கு! இந்தத் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு தடை!

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கும் திட்டம் தற்போது முழுமையாக செயல்படுத்தப்படவுள்ள நிலையில்,அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும் காரணத்தால் வருகின்ற செப்டம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள மின்னணு விற்பனை இயந்திரங்களை அதற்கு உரிய,சார்ஜர்களுடன் செப்டம்பர் 23ம் தேதி மாலைக்குள் அனைத்து வட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும்,
அங்கு பொறியாளர்களை கொண்டு,பொருட்கள் வினியோகம் செய்வதற்கான,
முறைகளை அந்த மின்னணுக் கருவிகளில் பதிவேற்றம் செய்வதுடன்,சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் பணியாற்றும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும்,இந்த மின்னணு கருவியைப் பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் நடைபெறாது என்றும் அன்று தினத்தில் ரேஷன் பொருட்கள் பெற வேண்டியவர்கள் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous articleகோவையில் பெண்ணிடம் நகைபறிக்க முயற்சி: பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை..!
Next articleசென்னையில் சில இடங்களில் இன்று மின்தடை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here