கலை அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் கவனத்திற்கு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

Photo of author

By Sakthi

கலை அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் கவனத்திற்கு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பொன்முடி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது.

இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி திட்டமிட்டபடி கட்டாயமாக வெளியாகும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ மாணவிகள் மே8ம் தேதி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தினத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

மே 8ம் தேதி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி மே 19ம் தேதி வரை இருக்கும். மாணவர்கள் மே8ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதே சமயம் இன்று அதாவது மே6ம் தேதி பி.இ, பி.டெக் போன்ற படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.