இன்றைய வானிலை நிலவரம்!

0
320

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், கோவை, திண்டுக்கல், சேலம், உதகை, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது மற்றும் மற்ற மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நாளை மறுநாள் அதாவது ஒன்பதாம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் வரும் பத்தாம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திண்டுக்கல், தேனி, தென்காசி, கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற உள்ள மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleதமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?
Next articleதாத்தாவை மிஸ் பண்ணும் உதயநிதி! ட்விட்டர் பக்கத்தில் என்ன கூறினார் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here