கன மழையில் தத்தளிக்க போகும் அந்த எட்டு மாவட்டங்கள்!

0
129

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

அதேபோல நாளையதினம் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி ,அரியலூர், பெரம்பலூர், கடலூர் திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleபொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க மாநகராட்சி செய்த சிறப்பு காரியம்!
Next articleநோய்தொற்று ஊரடங்கு! இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமல்!