தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

0
192

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்றது செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், நாளைய தினம் கடலூர், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் இடி உடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு! நடவடிக்கைகள் தீவிரம்!
Next articleதாலிபான்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை! இந்திய ஆசிரியர் விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here