நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆறுதல் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி!

Photo of author

By Sakthi

நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆறுதல் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி!

Sakthi

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது .முதல் மூன்று போட்டிகளில் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்றைய தினம் நடந்தது டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நயீம்28 ரன்கள் சேர்த்தார்.

இந்த நிலையில், 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி ருசித்தது இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.