T20:ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெறும் சூழலில் ஆஸ்திரேலியா அணி.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி. மேலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆஹா சல்மான் அறிவித்தார். பாகிஸ்தான் வீரர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பந்துவீச தொடங்கினார்கள்.
இதனால் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்துகளுக்கு தாக்கு பிடிக்காமல் தொடர் விக்கெட்டுகள் விழத் தொடங்கியது. மேலும் 18.1 ஓவர்கள் பாகிஸ்தான் வீரர்கள் ஆல் அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 41 ரன்கள்மட்டுமே எடுத்து இருந்தார்.
மேலும் ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.மேலும் ஆடம் ஜம்பா மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகிய இருவரும் 2 தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா வீரர்கள் பேட்டிங் விளையாடி வருகிறார்கள். குறிப்பாக இந்த அரை இறுதி முடிவுகளை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற சாதகமான சூழல் நிலவி வருகிறது என்பது தெரிய வருகிறது. இதனால் பாக்கிஸ்தான் அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். பாக்கிஸ்தான் ஆஸ்திரேலியாவை வெற்றி பெறுமா? என்பது ஆட்ட இறுதியில் தான் தெரியும்.