இவரு அங்க போறதே அவரை சந்திப்பதற்காக தானாம்! கண்டம் கடந்த நட்பு!

Photo of author

By Sakthi

இவரு அங்க போறதே அவரை சந்திப்பதற்காக தானாம்! கண்டம் கடந்த நட்பு!

Sakthi

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி முடிந்த பின்பு இந்த மாத இறுதியில், ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றது அப்போது 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், அதோடு நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகின்றன இரு அணிகளும், அதற்கான அணிகளும், வீரர்களும், அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாத ரோகித் ஷர்மா, டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார்.

முதல் டெஸ்ட் போட்டி முடிவுற்றதும், சொந்த வேலை காரணமாக கேப்டன் கோலி இந்தியா திரும்புகிறார்.

இதன்காரணமாக மீதமிருக்கும் போட்டிகளை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிகின்றது.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும், தமிழகத்தைச் சார்ந்த நடராஜனை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் நட்டி என்று ட்வீட் செய்து வரவேற்றிருக்கின்றார்.

இருவரும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் விளையாடியவர்கள். தன்னுடைய யார்க்கர் பந்துவீச்சால் மிரட்டிய காரணத்தால் அதில் வார்னரின் பாராட்டையும் பெற்றவர் நடராஜன். இதன் மூலமாக புதிய நட்பு உருவாகிவிட்டது.