சிறுமியை கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுனர்: சிறுமி செய்த தரமான சம்பவம்!!

Photo of author

By Pavithra

சிறுமியை கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுனர்: சிறுமி செய்த தரமான சம்பவம்!!

Pavithra

சென்னை பெரவள்ளூர் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட பகுதியில் 6 வகுப்பு படிக்கும் சிறுமி
வயது11,பெற்றோருடன் வசித்து வருகிறார்.இவர் கடந்த 14 ஆம் தேதிவீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார்.சென்று வீடு திரும்பும் வழியில் ஒரு ஆட்டோ இந்த சிறுமியை நோக்கி வந்தது.ஆட்டோ ஓட்டுனர் தலைக்கவசம் அணிந்த படி ஆட்டோவை ஓட்டி வந்தார்.

அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞர் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவில் ஏற்றிக் கடத்த முயற்ச்சித்துள்ளார்.ஆட்டோ ஓட்டுனரின் இந்த செயலால் சிறுமி கூச்சலிட ஆரம்பித்தார். மக்கள் யாராவது வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில ஆட்டோ ஓட்டுநர் சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளிக்க முயன்றுள்ளார்.

மயக்க மருந்தை தெளிக்க வருகிறார் என்பதனை சுதாரித்த சிறுமி ஆட்டோ ஓட்டுநரின் கையைக் பலமாக கடித்து அவிடத்தை விட்டு தப்பினார். இதற்கிடையில் ஆட்டோ ஓட்டுநரும் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

இந்த சம்பவத்தை சிறுமி தன் பெற்றோரிடம் சொல்லவே
இது குறித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆய்வாளர் திவ்யகுமாரி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

முதல் கட்டமாக அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். காட்சிகளின் அடிப்படையில் சிறுமியை கடத்த முயன்ற ஆட்டோ எண்ணை அடையாளம் கண்டுபிடித்தனர்.பின்பு சிறுமியை கடத்த முயன்றதாக சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்த ஹரிபாபுவை (24) என்பவரை நேற்று முன்தினம் போலிசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநரிடம் இருந்து சாதுர்யமாகத் தப்பிய அந்த சிறுமியை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இது போல் தான் Spot decision எடுக்க வேண்டும் என்று நேற்று நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.