இந்திய உருக்காலையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் !

நிர்வாகம் மற்றும் அதிகாரம் சாராத நிர்வாக அதிகாரி பணிகளுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்திய உருக்கு ஆணையத்தின் ரூர்கேலா உருக்கு தயாரிக்கும் ஆணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலிப் பணியிடங்கள்: 300-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி

இந்திய ஊருக்கு ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான. sailcareers.com வலைதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

கல்வித் தகுதி

துணை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர் அது தொடர்பான துறைகளில் பி இ ,பி டெக் போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழிற்சாலை பாதுகாப்பு பணியில் 2 வருட காலம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு தொடர்புடைய 3 வருட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

உதவி மேலாளர் பதவிக்கு 50,000 முதல் 1,60,000 வரையிலும் வழங்கப்படும். மற்ற பணிகளுக்கான ஊதியம் தொடர்பாக ஆள்சேர்ப்பு அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: துணை மேலாளர் பதவிக்கு ரூ.700-ம் , Mining Mate, Attendant-cum-Technician Trainee பதவிக்கு ரூ.100-ம், மற்ற பதவிகளுக்கு ரூ. 500-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இடஒதுக்கீடு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் சலுகை உள்ளது.

தேர்வு முறை

கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் 30ம் தேதி வரையில் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.