பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போ தீபாவளிக்கு இல்லையா!!!

0
99
#image_title

பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போ தீபாவளிக்கு இல்லையா!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அயலான் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தை இயக்குநர் எம்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங், கருணாகரன், பானுப்பிரியா, யோகி பாபு, பால சரவணன், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அயலான் திரைப்படத்தை கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. அயலான் திரைப்படத்தில் 4500க்கும் மேற்பட்ட வி.எப்.எக்ஸ் காட்சிகள் உள்ளது. மேலும் அயலான் திரைப்படம் இந்திய சினிமாவின் முழுநீள லைவ் ஆக்சன் திரைப்படமாக இருக்கப்போகின்றது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் அயலான் திரைப்படம் எப்மொழுது வெளியாகும் என்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் அயலான் திரைப்படத்தின் சிறிய கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு அயலான் திரூப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அது மட்டுமில்லாமல் அயலான் திரைப்படத்தின் டீசர் தயாராகி வருவதாகவும் விரைவில் வெளியாகும் அதன் பின்னர் அயலான் திரைப்படம் ஏன் வெளியாவதற்கு காலதாமதம் ஆகின்றது என்பது புரியும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் வி.எப்.எக்ஸ் வேலைகள் மற்றும் இதர வேலைகள் இன்னும் முடியாததால் அயலான் திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் பொங்கல் தினத்திற்கு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அயலான் திரைப்படத்துடன் நடிகர் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படமும், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று.

Previous articleகைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!!
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு!