ஐயப்ப பக்தர்களின் இருமுடி கட்டில் இதற்கு தடை !!  தேவசம் போர்டு  அறிவித்த  எச்சரிக்கை!!

Photo of author

By Sakthi

SABARIMALA:சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் இருமுடி கட்டில் கொண்டு வரும் சில பொருட்களுக்கு தடை விதித்து இருக்கிறது.

தென் இந்தியாவில் அதிக பக்தர்கள் செல்லும் கோவில்களில்  கேரளாவில் உள்ள சபரி மலையும் ஒன்றாகும். இக் கோவிலுக்கு பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து வருகிறார்கள். தமிழகம் மற்றும் கேரளா மட்டுமல்லாமல்  ஆந்திர, கர்நாடக மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.  சபரிமலையில் வருடந்தோறும் மண்டல பூஜை நடைபெறும்.

மேலும் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை  நவம்பர் மாதம் 16ம் தேதி தொடங்குகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது சபரிமலை தேவசம் போர்டு, ஆன்லைன் முன்பதிவு என தொடங்கி இருமுடிக்கட்டில் தவிர்க்க வேண்டிய பொருட்கள் வரை பல கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்களும் , உடனடி முன்பதிவு மூலம் 10  ஆயிரம் பக்தர்கள் ஒரு நாளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவலை முன் கூடியே தெரிவித்தது. தற்போது இருமுடி கட்டில் பத்தி , பன்னீர்,கற்பூரம் ஆகியவை கொண்டு வர வேண்டாம்  எனவும், இதில் பிளாஸ்டிக் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது .

 பக்தர்கள் கொண்டு வரும் இருமுடி கட்டில்,  பின் கட்டில் சிறிது அரிசியும் முன் கட்டில் புழுங்கல் அரிசி , தேங்காய், வெல்லம், கதலிப் பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் காணிப்பொன் ஆகியவைகள் மட்டும் போதும் என தேவசம் போர்டு தெரிவித்து இருக்கிறது.