விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!!

0
34
#image_title

விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம் அவர்கள் விராட் கோஹ்லி அவர்களிடம் இருந்து ஜெர்சியை வாங்கினார். இதையடுத்து இது தேவையற்ற செயல் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று(அக்டோபர்14) நடைபெற்ற போட்டியில் உலகமே எதிர்பார்த்த இரண்டு அணிகள் மோதியது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 10 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய நடப்பு உலகக் கோப்பை தொடர்பு மூன்றாவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதையடுத்து போட்டி புகுந்த பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அம் அவர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்களின் ஜெர்சியை வாங்கினார். மேலும் அவருடைய ஆட்டோகிராப் போடப்பட்டு அந்த ஜெர்சியை விராட் கோஹ்லி அவர்கள் பாபர் அசம் அவர்களிடம் வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இதை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அவர்கள் இது தேவையற்ற செயல் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக வாசிம் அக்ரம் அவர்கள் “விராட் கோஹ்லி அவர்களுடைய ஜெர்சியை பாபர் அசம் கேட்டிருக்கக் கூடாது. இந்த செயலுக்கு இந்த நாள் சரியான நாள் இல்லை. இதை கேமரா முன் பாபர் அசம் செய்திருக்கக் கூடாது. அப்படியே ஜெர்ஸி வேண்டும் என்றால் கேமரா முன் வாங்காமல் டிரெஸ்சிங் ரூம் சென்று வாங்கி இருக்கலாம்” என்று கூறியுள்ளார். மோசமான தோல்விக்கு பிறகு பாபர் அசம் அவர்கள் கோஹ்லியின் ஜெர்ஸியை வாங்கியது வாசிம் அக்ரம் அவர்களுக்கு வர்தத்தை அளித்துள்ளது.