ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! 

Photo of author

By Sakthi

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! 

Sakthi

Updated on:

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!!

பாகிஸ்தான் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரரான பாபர் அசம் ஓ.டி.ஐ கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். அதுவும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இன்று அதாவது மே 5ம் தேதி நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்று கொண்டிருக்கின்றது.

நான்காவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்த பாபர் அசம் சதம் அடித்து 107 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசம் படைத்துள்ளார்.

அதாவது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசம் நிகழ்த்தியுள்ளார். பாபர் அசம் 97 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதிவேகமாக 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்கா கிரிகெட் அணியை சேர்ந்த ஹசீம் அம்லா 101 போட்டிகளில் விளையாடி 5000 ரன்களை கடந்து அதிவேகமாக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் சாதனையையும் வைத்திருந்தார். தற்போது பாபர் அசம் 97 போட்டிகளில் 5000 ரன்களை எடுத்து ஹசீம் அம்லா அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.