பிரபல பின்னணி பாடகிக்கு குழந்தை பிறந்தது! மகிழ்ச்சியில் குடும்பம்!

Photo of author

By Hasini

பிரபல பின்னணி பாடகிக்கு குழந்தை பிறந்தது! மகிழ்ச்சியில் குடும்பம்!

கடந்த 2002 ம் ஆண்டு தேவதாஸ் படத்தில் பாடிய பாடலுக்கு தேசிய விருது வாங்கியுள்ளார்இவர் கேளும் பல பிலிம்பேர் விருதுகளும் வாங்கியுள்ளார்.

இது இல்லாமல் தமிழில் சில்லுனு ஒரு காதல் மற்றும் 150 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார்.இவர் வேற யாரும் இல்லைங்க நம்ம எல்லாருக்கும் பிடித்த ஸ்ரேயா கோஷல் தான்.இவரது கணவர் ஷிலாதித்யா முகோபாத்யாயா ஆவார்.

ஸ்ரேயா கோஷல் கடந்த மார்ச் மாதம் ஒரு புகைப்படத்தை இன்ச்டாக்ராமில் வெளியிட்டு தான் கற்பமாக இருப்பதாக பதிவிட்டார்.அதனை தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

சனிக்கிழமையான நேற்று மதியம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்றும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளார்.மேலும் அதில் கடவுள் எங்களுக்கு விலைமதிப்பில்லா ஆண் குழந்தையை கொடுத்துள்ளார் என பதிவிட்டு உள்ளார்.

இதை போன்ற மகிழ்ச்சியை தான் இதற்கு முன் உணர்ந்ததே இல்லை என்றும், எங்களது குடும்பம் முழுமையடைந்துள்ளது என்றும் கூறி உள்ளார்.எங்களின் இந்த மகிழ்சிக்காக விலை மதிப்பில்லா ஆசீர்வாதங்களை கொடுத்த உங்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறி உள்ளார்.