Back Acne in Tamil: நாம் அனைவரும் பரு முகத்தில் மட்டும் தான் தோன்றும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சிலருக்கு அவர்களின் முதுகுப்பகுதி தோள்பட்டை சில சமயங்களில் கழுத்துப் பகுதி மற்றும் மார்பு பகுதிகளில் சொரசொரப்பாக சிறு சிறு புள்ளிகள் போன்று காணப்படும். அவைகள் பார்ப்பதற்கு முகத்தில் உள்ள பருக்களை ஒத்து காணப்படும். ஆனால் ஒரு சிலர்கள் இதனை அலர்ஜி என நினைத்து விடுவார்கள். இதுவும் ஒரு வகையான பருக்கள் தான். கழுத்துப்பகுதி, மார்பு, தோள்பட்டை மற்றும் முதுகு பகுதிகளில் ஏன் இவ்வாறு பருக்கள் தோன்றுகின்றன அவற்றை நீக்குவதற்கு வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முதுகு பகுதி தோள்பட்டை மார்பு பகுதியில் பரு ஏற்பட காரணம்?
பரு என்பது உடலின் எந்தப் பகுதியிலும் உருவாக்கக்கூடிய பொதுவான தோள் பிரச்சனையாகும். இது முகத்தில் மட்டும் தான் தோன்றும் என்பது அல்ல. இவ்வாறு தோன்றும் பருக்கள் சிறிய அளவிலும் இருக்கலாம் அல்லது பெரிய அளவில் கட்டிகள் போன்று உருவாகி வலிகளையும் ஏற்படுத்தலாம்.
பொதுவாக இந்த பருக்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் நாம் அணியும் உடை தான். கோடை காலங்களில் பொதுவாக நமக்கு அதிகப்படியான வியர்வை வெளிவரும். ஆனால் அந்த சமயம் இறுக்கமான உடைகளை அணிவதன் மூலம் நம் உடலில் வியர்வை காரணமாக பாக்டீரியாக்கள் உருவாகும். இந்த பாக்டீரியாக்கள் தோலின் துளைகளை அடைத்துக்கொள்வதால் இது போன்ற பருக்கள் உருவாகின்றன.
மேலும் மன அழுத்தம் காரணமாகவும் நாம் உட்கொள்ளும் உணவின் காரணமாகவும் நாம் பயன்படுத்தும் சோப்பு காரணமாகவும் இந்த பருக்கள் உண்டாகலாம்.
ஒரு சிலருக்கு நாளமில்லா சுரப்பியின் கோளாறு காரணமாக ஹார்மோன்கள் மாற்றத்தினால் முதுகுப் பகுதி தோள்பட்டை கழுத்து பகுதி மார்பு பகுதிகளில் பருக்கள் உண்டாகின்றது.
முக்கிய காரணமாக நமது உடலில் வியர்க்கும், வியர்வை சரியாக வெளிவராமல் எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களை உருவாக்கி அலர்ஜி ஏற்படுத்துகிறது. நாளடைவில் அது பெரிய கட்டிகளாகவோ அல்லது பருக்கள் போன்று உருவாகி வலியையும் அரிப்பையும் ஏற்படுத்தும்.
எவ்வாறு குணப்படுத்தலாம்?
இதனை வராமல் தடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும் ஆடைகள் இறுக்கமாக இருக்காமல் சற்று தளர்வாக இருக்க வேண்டும்.
மேலும் அவ்வாறு பருக்கள் உடல் பகுதியில் ஏற்பட்டிருந்தால் அதனை தடுப்பதற்கு சிறந்த மருந்தாக இருப்பது மஞ்சள். மஞ்சள் தேய்த்து குளிப்பதன் மூலம் பருக்கள் வருவதை நாம் தடுக்க முடியும்.
அடுத்தபடியாக சோற்றுக்கற்றாழை, சோற்றுக்கற்றாழையின் ஜெல் எடுத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் பருக்கள் மறைந்து விடும்.
வேப்ப இலை சிறந்த கிருமி நாசினியாக இருக்கக்கூடிய இலைகளில் ஒன்று வேம்பு. இந்த இலைகளை பறித்து நீர் விட்டு அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வர பருக்கள் குறைந்து விடும்.
மேலும் உடல் பகுதியில் பருக்கள் ஏற்பட்டால் அதனை சொரிந்து தேய்த்து குளிக்க கூடாது.
மேலும் படிக்க: Poovarasu Maram: உங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மரம் உள்ளதா? கட்டாயம் இதை பாருங்க..!