ADMK TVK: தமிழக அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருபவர் விஜய். தவெக மீது பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சங்களை முன்வைத்தாலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பலரும் போட்டிபோட்டு கொண்டிருக்கிறனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விஜய் அவர்களை அதிமுகவில் இணையும் படி நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் விஜய் திமுகவை உண்மையாக எதிர்க்கிறார் என்றால், அவர் அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியுமென்றும், இல்லையென்றால் திமுகவே தவெகவை அழித்துவிடும் என்றும் கூறினார். விஜய் தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்றும், விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்றும் விமர்சித்தார்.
சிறிய கட்சிகள் தவெகவிற்கு வருவது பெரிய விஷயமல்ல, ஆனால் முன்னணி கட்சியாக திகழ்ந்த அதிமுக புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யிடம் கூட்டணி குறித்து கேட்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக தற்போது பின்தங்கியுள்ளதை காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ராஜேந்திர பாலாஜியின் அழைப்புக்கு விஜய் எந்த பதிலும் கூறாமல் உள்ளார். சட்டமன்ற தேர்தலில் தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்குமா இல்லையா என்பது விஜய்யின் முடிவில் தான் உள்ளது.