நமது முன்னோர்கள் ஆபத்து வரப்போவதாக சில எதிர்மறையான விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது, இது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த ஏழு விஷயங்களும் கெட்ட சகுனமாகவும், ஆபத்து வர போவதாகவும் உணர்த்துவதாக நமது முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர்.
முதலாவதாக நாம் வெளியில் கிளம்பும் பொழுது கால் தடுக்க நேர்ந்தாலும், தலையில் இடித்துக் கொண்டாலோ அதைக் கெட்ட சகுனம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நேரும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு பிறகு வெளியில் கிளம்ப வேண்டும். காலச்சக்கரம் நமக்கு எதிராக சூழலும் பொழுது, நாம் செய்த புண்ணிய கர்ம வினையானது நமக்கு வரக்கூடிய ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இதுபோல கெட்ட சகுனங்களை நமக்கு காட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
இரண்டாவதாக நமது வீட்டில் துளசி செடி இருந்தால் அது திடீரென காய்ந்து உலர ஆரம்பித்தால், அதுவும் கெட்ட சகுனமாக கூறப்படுகிறது. நன்றாக இருந்த துளசி செடி திடீரென காய்வது குடும்பத்திற்கு ஆகாது. ஏதோ ஒரு நிதி சார்ந்த ஆபத்து வரப்போகிறது என்பதை அது உணர்த்துகிறது.
மூன்றாவதாக பணத்தை தொலைத்து விட்டு வருவது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. பத்திரமாக வைத்திருந்த பணம் நம்மை அறியாமலே எங்காவது தொலைக்க நேர்ந்தால், ஒரு பெரிய ஆபத்து வரப்போவதை குறிப்பதாக கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத செலவுகளும், மருத்துவ செலவுகளும் வரக்கூடும்.
நான்காவது நமது வீட்டில் நெய் அல்லது எண்ணெய் இருந்தால் அது கீழே கொட்ட கூடாது. இவ்வாறு கைத்தறி கீழே விழுவதும் கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் எந்த ஒரு செயலிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
ஐந்தாவது வீட்டில் பல்லி இருந்தால் நல்ல சகுனம் என்று சொல்லுவார்கள். பல்லி நமது மேல் விழுந்தால் அதற்கான பலன் என்ன என்பதை நமது வீட்டு காலண்டர் கூறிவிடும். வீட்டில் பல்லி இருப்பது அதிர்ஷ்டம் தரும் என்பார்கள், ஆனால் வீட்டில் இரண்டு பல்லிகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டால் அது கெட்ட சகுனமாக கூறப்படுகிறது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும், வம்பு வழக்குகளும் வரப்போவதை முன்கூட்டியே உணர்த்துவதாக அர்த்தம்.
ஆறாவதாக பூஜை செய்யும் பொழுது தீபம் காட்ட வேண்டும். வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் கற்பூர தீபத்தினை காண்பிக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் வீட்டில் நேர்மறையான எண்ணங்கள் பரவும். இப்படி தீபம் காட்டும் பொழுது ஒரு முறைக்கு மேல் தீபம் ஆணைய கூடாது. இவ்வாறு ஒரு முறைக்கு மேல் தீபம் அணைவதும் கெட்ட சகுனமாக கூறப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.