பெண்கள் மனதில் இடம் பிடிக்க…! திருமாவளவன் கையில் எடுத்த மோசமான அரசியல் யுக்தி…!

Photo of author

By Sakthi

பெண்கள் மனதில் இடம் பிடிக்க…! திருமாவளவன் கையில் எடுத்த மோசமான அரசியல் யுக்தி…!

Sakthi

Updated on:

இந்துமத பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று தெரிவித்து இருக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

பெண்கள் கடவுளால் படைக்கப்பட்ட பரத்தையர்கள் இந்து மதத்தின் கோட்பாடு படி பெண்கள் அனைவரும் விபச்சாரிகளே என்றும், அவர்கள் ஆண்களுக்கு எப்போதும் கீழானவர்கள் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்துமத பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக, பேசி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்து வருகின்றது.

பெண்கள் சம்பந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுமட்டுமல்லாது, எப்போதுமே அவர் இந்து மதத்தினை கொச்சைப் படுத்தும் விதமாகவே பேசி வருகிறார். என்ற விமர்சனமும் எழுந்த வண்ணம் இருக்கின்றது.

திருமாவளவனுக்கான எதிர்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த சூழ்நிலையில், தன் மீதான இந்த கரையினை மறைக்க முயற்சிக்கும் அவர் மக்களை ஏமாற்றுவதற்கான தந்திரத்தை கையில் எடுத்து இருக்கின்றார்.

அந்த வகையில் நான் முதல்வரானால் மதுக்கடைகளை முழுவதுமாக அடைப்பேன் என்று தெரிவித்திருக்கின்றார். ஆனால் அவர் தெரிவித்த இந்த விஷயமே அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் மாறி இருக்கின்றது. அவர் இவ்வாறு தெரிவித்தது திருமாவளவனின் முகத்திரையை கிழித்து விட்டது என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் உலாவுகின்றன.

அவரின் இந்த செயல் மூலமாக இந்துமத பெண்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்தது மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் பெண் இனத்தின் உணர்வுகளைக் காயப்படுத்திய அவர்களின் வெறுப்பிற்கும் பாத்திரமாக மாறி இருக்கின்றார். என்று மிகப்பெரிய கண்டனங்கள் எழுந்திருக்கின்றனர்.