காரியத் தடையை நீக்கும் பரிகாரம்!!

Photo of author

By Pavithra

பொதுவாகவே நம் வாழ்க்கையில் எந்த செயல் செய்தாலும் அதில் ஏதோ ஒரு இடர்கள் (தடங்கள்) வந்த வண்ணம் இருக்ககும்.சில நேரங்களில் நாம் செய்யும் நல்ல செயல்களை கூட சில தடைகளால் செய்துமுடிக்க முடியாமால் போய்விடும்.அதுவும் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இது போன்ற தடைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.

திருமண முயற்சி, தொழில்முயற்சி போன்றவற்றை கண்திருஷ்டி, செய்வினை கோளாறலாலும் தடைகள் நேரிடும்.

இதனை சரிச் செய்ய கால பைரவ வழிபாடு நல்ல பலன்களை தரும்.பொதுவாகவே பைரவரை வணங்கினால் காரியத்தடைகள் நீங்கும் என்று முன்னோர்கள் கூறுவர்.கால பைரவரை வணங்கும் சில வழிமுறைகளை பற்றி இதில் காண்போம்.

நம் வீட்டில் அல்லது தொழில் ஸ்தாபனத்தில் ” நல்ல முத்திய தேங்காய் ஒன்றை எடுத்து மஞ்சள் தடவி பூஜை அறையில் வைக்கவேண்டும்.தேங்காய்க்கு அருகில் 2 காசுகள் வைத்து பைரவரை நன்றாக மனதில் நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஏதேனும் கால பைரவர் திருக்கோவிலுக்கு சென்று அந்த காசை உண்டியலிலும்,தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி பின்பு தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும்.இதனால் நம்வாழ்வில் தோன்றும் காரியத்தடைகள் நீங்கும் என்பது ஆன்மீக ரீதியான நம்பிக்கையாகும்.