தமிழ்நாட்டில் மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. அதில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என செயல்பட்டு வரும் நிலையில் 24 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை, 16 தனியார் என 30 சர்க்கரை ஆலைகள் அரவை பணி மேற்கொண்டன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-25 காலகட்டத்தில் 18.81 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்து 8 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்தது.
அரவை மேற்கொண்ட சுமார் 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தாங்கள் கொள்முதல் செய்து அரவை செய்த 10.30 லட்சம் மெட்ரிக் டன் கரும்பிற்கு 329.34 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அந்த பணத்தை தங்கள் ஆலையின் சொந்த நிதியிலிருந்து கரும்பு விவசாயிகளுக்கு கரும்புத் தொகையை வழங்கி உள்ளனர். மேலும் கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு 5920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகை கடனாக 97.77 கோடி ரூபாய் தர அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணமும் நிலுவை இல்லாமல் முழுமையாக வழங்கி உள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் இந்த செயலுக்கு விவசாயிகள் ஒன்று சேர்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.