சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருது! 8வது முறையாக வென்று மெஸ்சி சாதனை !!

Photo of author

By Sakthi

சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருது! 8வது முறையாக வென்று மெஸ்சி சாதனை
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருதை லியோனல் மெஸ்சி அவர்கள் பெற்றுள்ளார். 8வது முறையாக இந்த விருதை பெற்று சாதனை படைத்த மெஸ்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
கால்பந்து விளையாட்டின் மிக உயர்ந்த விருதாக  பார்க்கப்படும் பலோன் டி ஓர் விருது சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு வருடமும் பிபா வழங்கி வருகின்றது. 1956ம் ஆண்டு முதல் சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைக்கான பலோன் டி’ஓர் விருது  வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு பலோன் டி’ஓர் விருதுக்காக 30 கால்பந்து வீரர்கள், 30 கால்பந்து வீராங்கனைகள் என முத்தம் 60 பேர் கொண்ட பட்டியல் தயார்  செய்யப்பட்டது. இதில் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த லியோனல் மெஸ்சி அவர்கள் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருதை  வென்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெறுவதற்கு லியோனல் மெஸ்சி முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரின் 7 கால்கள் அடித்த லியோனல் மெஸ்சி 4 ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருது லியோனல் மெஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
லியோனல் மெஸ்சி பலோன் டி’ஓர் விருதை எட்டாவது முறையாக வென்றுள்ளார். லியோனல் மெஸ்சி இதற்கு முன்பாக 2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த பலோன் டி’ஓர் விருதை வென்று அசத்தியுள்ளார். லியோனல் மெஸ்சி இந்த விருதுக்காக அதிகமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கால்பந்து விளையாட்டில் சிறந்த வீராங்கனைக்கான பலோன் டி’ஓர் விருது ஸ்பெயின் அணியை சேர்ந்த வீராங்கனை அடானா பொன்மதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வெற்றி பெறுவதற்கு அடானா பொன்மதி சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். இதனால் இவருக்கு பலோன் டி’ஓர் விருது வழங்கப்பட்டது.