தீ மீது நடந்து பயிற்ச்சி எடுத்த வங்கதேச வீரர்… இணையத்தால் வைரலாகும் வீடியோ!!

Photo of author

By Sakthi

 

தீ மீது நடந்து பயிற்ச்சி எடுத்த வங்கதேச வீரர்… இணையத்தால் வைரலாகும் வீடியோ…

 

வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முகமது நைம் நெருப்பு மீது நடந்து பயிற்ச்சி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

நடப்பாண்டு ஆசியக் கோப்பை தொடர் ஏப்ரல் மாதம் 30ம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஆசியா கண்டத்தில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது.

 

ஆசியக் கோப்பை தொடருக்காக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக வங்கதேச கிரிக்கெட் அணியில் தெடக்க வீரர் முகமது நைம் வித்தியாசமான பயிற்சிகளை எடுத்து வருகின்றார். இவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முகமது நைம் ஆசியக்கோப்பையில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நெருப்பு மீது நடந்து பயிற்சி எடுத்து வருகிறார். மேலும் நெருப்பு மீது நடப்பதால் மனதளவில் அமைதியை ஏற்படுத்த உதவும் என்பதால் முகமது நைம் அவர்கள் நெருப்பு மீது நடந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 

இதற்காக 3-5 அடி அளவுக்கு நெருப்பை மூட்டினார். பின்னர் அந்த நெருப்பின் மீது முகமது நைம் அவர்கள் கூலாக நடந்து சென்றார். இதையடுத்து அவர் நடந்து செல்லும் பொழுது அவருடைய பயிற்சியாளர் கைதட்டி பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

 

இதற்கு முன்னர் பல வித்தியாசமான பயிற்சிகளை பார்த்த ரசிகர்களுக்கு நெருப்பின் மீது நடந்து செல்லும் பயிற்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் வேடிக்கையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.