நாடு முழுவதிலும் கடந்த நிலவரத்தின் அடிப்படையில் 8.03 கோடி கிரெடிட் கார்டுகள் இருக்கின்றனவாம் நாம் ஒவ்வொருவர் கையிலும் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. ஆகவே நாம் எத்தனை கிரெடிட் கார்டுகள் தான் வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த பகுதியில் பார்க்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுக்கு நான் விண்ணப்பம் செய்யலாமா?
ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு இருப்பது நல்லது தான். ஏனென்றால் அவசர தேவைகளின் போது ஒரு கார்டு வேலை செய்யாமல் போனாலும் மற்றொரு கார்டை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பல கார்டுகளை மேலாண்மை செய்வதும், உரிய சமயத்தில் தவணைகளை திருப்பி செலுத்துவதும் தான் சிக்கலான விஷயம்.
எந்த கார்டு தேவை என்பதை எப்படி தீர்மானிப்பது ?
உங்களுக்கான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் உள்ளிட்டவற்றை பொறுத்து கிரெடிட் கார்டுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு நீங்கள் மிக அதிகமாக ஷாப்பிங் செய்பவர் என்றால் அதற்கு சலுகை வழங்கும் கார்டுகளை தேர்வு செய்யலாம்.
அதேபோல அதிக பயணம் மேற்கொள்பவர் என்றால் டிக்கெட் மற்றும் ஹோட்டல் அறை புக்கிங் சலுகைகளை வழங்கும் கார்டுகளை தேர்வு செய்யலாம்.
வெவ்வேறு சேவைதாரர்களை தேர்வு செய்ய வேண்டுமா?
ஆம் ஆமெக்ஸ், டைனர் கிளப், மாஸ்டர் கார்டு, ரூபே, விசா கார்டு என வெவ்வேறு சேவைதாரர்களை தேர்வு செய்யுங்கள். எதில் அதிகமான கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள் கிடைக்கின்றதோ அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கடன் வரம்பு அதிகரிக்குமா ?
நிச்சயமாக ஒரு கார்டில் உங்களுக்கு 2 லட்சம் வழங்கப்படுகிறதென்றால் மற்றொரு கரண்டிலும் உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும் பட்சத்தில் மொத்தமாக 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும் மிகவும் அவசரப்படாமல் மாத சம்பளத்திற்கு ஏற்றவாறு கடன் பெற வேண்டும்.
பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை என்ன செய்வது?
தல கார்டுகள் உங்களிடம் பயனற்ற நிலையில் இருந்தால் தேவையில்லாத ஒன்றை உடனடியாக முடித்துக் கொள்ளவும். நிலுவைத் தொகையை செலுத்திவிட்டு வங்கி அல்லது நிதி சேவையாளருக்கு கடிதம் அல்லது ஈமெயில் மூலமாக தகவல் தெரிவித்து கிரெடிட் கார்டுகளை முடிவுக்கு கொண்டு வரவும்.